search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி பாலியல் புகார்"

    நிர்மலாதேவி வழக்கில் அவரிடம் பல்வேறு சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டியிருப்பதால் வருகிற 22-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Nirmaladevi #HCMaduraiBench
    மதுரை:

    அருப்புக்கோட்டை பேராசிரியை, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உள்ளது.

    இந்த நிலையில் அரசு கூடுதல் வழக்கறிஞர் அரவிந்த்பாண்டியன், மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு ஆஜராகி நிர்மலாதேவி வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    மேலும் அவருக்கு மதுரை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கும் போது ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது என நிபந்தனை விதித்து உள்ளது.

    மேலும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நிர்மலாதேவி வழக்கை விசாரிக்க இடைக்கால தடையும் உள்ளது.

    இந்த நிலையில், நிர்மலா தேவி பற்றிய செய்திகள் தமிழ் வார இதழில் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. ஆகவே அந்த வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என முறையீடு செய்தார்.

    அதை கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே நிர்மலாதேவி நேரில் ஆஜராகி பல கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். அவரிடம் மேலும் பல சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்க வேண்டி உள்ளதால் வருகிற 22-ந் தேதி மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் அறையில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர். #Nirmaladevi #HCMaduraiBench
    கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி இன்று ஆஜரானார். #nirmaladevi

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

    ஓராண்டுக்குப்பின்னர் கடந்த 12-ந்தேதி மதுரை ஐகோர்ட்டு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

    இந்த நிலையில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி ஆஜரானார். இதற்காக அவர் தனியாக காரில் வந்தார். செய்தியாளர்களை பார்த்தவுடன் “பேசக் கூடாது” என்று வாயில் கையை வைத்து சைகை செய்தபடி கோர்ட்டுக்குள் சென்றார்.

    பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓராண்டாக கோர்ட்டுக்கு அவர் அழைத்து வரப்பட்ட நிலையில் இன்று அவர் தனியாக காரில் வந்தது வித்தியாசமாக இருந்தது. நிர்மலாதேவி விடுதலையானபோதும் இதுவரை அவரை குடும்பத்தினர் யாரும் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. #nirmaladevi 

    பேராசிரியை நிர்மலா தேவியை ஜாமீனில் எடுக்க தேவையான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு வருவதால் அவர் விடுதலை ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. #NirmalaDevi
    மதுரை:

    அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கடந்த ஏப்ரல் 16-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

    அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் நிர்மலாதேவிக்கு மதுரை ஐகோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

    ஐகோர்ட்டு கடந்த 12-ந்தேதி ஜாமீன் வழங்கியும் இன்னும் நிர்மலாதேவி விடுதலை ஆவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அவரது வக்கீல் பசும்பொன் பாண்டியன் கூறியதாவது:-

    பேராசிரியை நிர்மலா தேவியை ஜாமீனில் எடுக்க அவரது ரத்த சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு தந்து வருகிறார்கள். நிர்மலா தேவியின் தாய்-தந்தை இறந்துவிட்ட நிலையில் அவரது சகோதரர் பெயரில் வீட்டு வரி ரசீது இல்லாததால் ஜாமீன் ஆவணங்கள் தயார் செய்வதில் ஓரிரு நாள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    வருகிற 18-ந்தேதி ஜாமீன் ஆவணங்கள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும். மறுநாள் (19-ந்தேதி) நிர்மலாதேவி நிச்சயம் விடுதலை ஆவார். அதற்கான சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வருகிற 19-ந்தேதி நிர்மலாதேவி விடுதலை ஆனால் ஜாமீன் கிடைத்தும் ஒரு வாரம் தாமதத்துடன் அவர் சிறையில் இருந்து விடுதலை ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. #NirmalaDevi
    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் கைதான பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் இன்று ஜாமீனில் விடுதலையானார்கள். #NirmalaDevi
    மதுரை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அந்த கல்லூரியின் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.

    அவர் கொடுத்த தகவலின் பேரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதானார்கள். 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    எனவே முருகன், கருப்பசாமி தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இருவருக்கும் ஜாமீன் வழங்கி கடந்த 12-ந்தேதி உத்தரவிட்டது.

    நிர்மலாதேவி தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. வழக்கு கடந்த 14-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவு நகல் கிடைக்காததால் தாமதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஜாமீன் உத்தரவு ஆவணங்கள் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. நீதிபதி (பொறுப்பு) சாய் பிரியா விசாரணை நடத்தி முருகன், கருப்பசாமி இருவருக்கும் தலா ரூ. 75 ஆயிரம் சொத்து மதிப்புள்ள 4 நபர்களை ஜாமீன்தாரர்களாக ஏற்றுக் கொண்டு ஜாமீனில் விட அனுமதி வழங்கினார்.

    நீதிபதி உத்தரவு தொடர்பான ஆவணங்கள் மதுரை சிறைத்துறை அதிகாரிகளிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    9 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து விடுதலையான இருவரையும் உறவினர்கள் அழைத்துச் சென்றனர். சிறையில் இருந்து வெளியே வந்த முருகன் நிருபர்களிடம் கூறும்போது ‘என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அதனை சட்டப்படி சந்திப்பேன்’ என்றார். #NirmalaDevi #NirmalaDeviAudioCase
    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாலியல் புகாரில் சிக்கிய தலைமை பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். #StudentHarassment #ProfessorDismissed
    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள தொடர்பியல் துறை தலைவராக பேராசிரியர் கோவிந்த ராஜ் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் புகார் கூறினார்.

    இது தொடர்பாக ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ஓய்வு பெற்ற பல்கலைக்கழக பதிவாளர், மூத்த பேராசிரியர்கள் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தினார்கள். இதில் ஆராய்ச்சி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்கள் நடந்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக அந்த குழுவினர் பல்கலைக்கழகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்தனர். இதுபோல பல்கலைக்கழக ஆங்கில துறையில் பணிபுரிந்த துணை பேராசிரியர்கள் பூவலிங்கம், ரமேஷ், உதவி பேராசிரியர் ஜெனிதா ஆகிய 3 பேர்களும் வகுப்புகளுக்கு ஒழுங்காக சென்று பாடம் நடத்தாமலும், துறை தலைவரின் கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாகவும் ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ஓய்வு பெற்ற பதிவாளர் மற்றும் மூத்த பேராசிரியர்கள் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தினார்கள். இதில் 3 பேராசிரியர்களும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதுகுறித்தும் ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் பல்கலைக்கழகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக்குழு கூட்டம் துணைவேந்தர் பாஸ்கர் தலைமையில் நடந்தது. அப்போது ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் சமர்ப்பித்த அறிக்கைகளும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    பூவலிங்கம், ஜெனிதா, ரமேஷ்

    இதில் பாலியல் புகார் கூறப்பட்ட தலைமை பேராசிரியர் கோவிந்தராஜுக்கு கட்டாய ஓய்வு கொடுத்து பணி நீக்கம் செய்வது என்றும், மற்ற 3 பேராசிரியர்களையும் பணிநீக்கம் செய்வது என்றும் ஆட்சிமன்ற குழுவில் முடிவு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர், பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு ஆகியோர், 4 பேராசிரியர்களையும் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டனர். பல்கலைக்கழகத்தில் 4 பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது கல்லூரி பேராசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #StudentHarassment #ProfessorDismissed
    பாலியல் வழக்கில் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்கு குற்றப்பத்திரிகையில் போதிய முகாந்திரம் இல்லாததால் விடுதலை செய்யக்கோரி நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். #NirmalaDevi
    விருதுநகர்:

    கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜாமீன் கோரி 7 முறை தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    இந்த நிலையில் எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்கு குற்றப்பத்திரிகையில் போதிய முகாந்திரம் இல்லை. எனவே எங்கள் 3 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று இன்று விருதுநகர் மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனு மீது விசாரணை நடைபெற உள்ளது. #NirmalaDevi
    உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி மற்றும் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியைகள் 2 பேரும் வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டனர். #ChennaiStudentharassment #AgriCollege
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரியும் தங்கபாண்டியன் என்பவர் தொடர்ந்து 7 மாதங்களாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த மாணவி புகார் கூறினார்.

    மாணவிகள் தங்கியுள்ள விடுதியில் வார்டன்களாக இருந்த பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோர் தங்கபாண்டியனுக்கு ஆதரவாக செயல்பட்டனர். பேராசிரியைகள் பேசியதாக மாணவி ஆடியோக்களையும் வெளியிட்டார். சர்ச்சை வெடித்ததால் பேராசிரியர் தங்கபாண்டியன் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    பாலியல் புகார் குறித்து ஏ.டி.எஸ்.பி. வனிதா தலைமையிலான போலீசார் மற்றும் கோவை வேளாண் பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தேர்வுகள் முடிந்து இந்த வாரம் திங்கட்கிழமை வகுப்புகள் தொடங்கியது.

    பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி கல்லூரிக்கு சென்றார். வகுப்பறைக்குள் அந்த மாணவி சென்றவுடன், சக மாணவ-மாணவிகளை அழைத்துக் கொண்டு பேராசிரியைகள் கல்லூரியை விட்டு வெளியே சென்றனர். இதையடுத்து, மாணவியை கல்லூரி நிர்வாகம் வலுகட்டாயமாக வெளியேற்றியது.

    தொடர்ந்து, இந்த வாரம் முழுவதும் மாணவியை வகுப்பறைக்குள் விடாமல் பேராசிரியர்கள் தடுத்தனர். மேலும், தங்களால் அந்த மாணவிக்கு பாடம் நடத்த முடியாது, வேறு கல்லூரிக்கு அவரை மாற்றி விடுங்கள் என்று பேராசிரியர்கள் கல்லூரி முதல்வரிடம் கூறினர். இதற்கு மாணவி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

    பாலியல் புகார் குறித்து விசாரணை நடைபெறும் நேரத்தில் நான் வேறு கல்லூரிக்கு எப்படி செல்ல முடியும். விசாரணைக்கு என்னால் ஆஜராக முடியாமல் போகும். நான் தொடர்ந்து இதே கல்லூரியில் தான் படிப்பேன் என்று மாணவி திட்டவட்டமாக கூறினார். மாணவிக்கு ஆதரவாக வாழவச்சனூர் கிராம மக்களும் பேராசிரியர்களுக்கு எதிராக போர்கொடி தூக்கினர்.

    குற்றச்சாட்டில் சிக்கிய பேராசிரியர், பேராசிரியைகளை தப்பிக்க வைக்க மாணவியை கல்லூரியில் இருந்து நீக்க முயற்சி செய்வதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர். இதற்கிடையே, கல்லூரி வளாகத்திற்குள் மாணவி வந்து செல்லும் போது அவரது நடவடிக்கையை ஒரு சில பேராசிரியர்கள் செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர்.

    இதுதொடர்பாகவும் போலீசாரிடம் மாணவி புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், பாலியல் புகார் கூறிய மாணவி திடீரென திருச்சி நாவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    ஒழுங்கு நடவடிக்கை குழு நடத்திய விசாரணை அடிப்படையில் மாணவியை திருச்சி கல்லூரிக்கு மாற்றியுள்ளதாக கோவை வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை கல்லூரியில் இருந்து உடனடியாக வெளியேறி திருச்சி கல்லூரியில் சேருமாறு மாணவிக்கு அனுப்பப்பட்டுள்ள உத்தரவு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோரும் வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திரூர் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு பேராசிரியை மைதிலியும், கோவை வேளாண் கல்லூரிக்கு மற்றொரு பேராசிரியையான புனிதாவும் மாற்றப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி கூறுகையில், நான் திருவண்ணாமலை வேளாண் கல்லூரியில் இருந்து வேறு எந்த கல்லூரிக்கு மாற்றினாலும் செல்லமாட்டேன். பாலியல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களை தப்பிக்க வைப்பதற்காகவே என்னை வேறு கல்லூரிக்கு மாற்றி உள்ளனர்.

    தவறு இழைக்காத நான் ஏன் வேறு கல்லூரிக்கு செல்ல வேண்டும். தவறு செய்த பேராசிரியர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை போராடுவேன் என்று மாணவி கூறினார். #ChennaiStudentharassment #AgriCollege

    பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் கூறிய மாணவியிடம் வேளாண் பல்கலை ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. #ChennaiStudentharassment #AgriCollege
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை அரசு வேளாண்மை கல்லூரியில் சென்னை பெருங்குடியை சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    மாணவி தங்கி இருந்த விடுதியின் வார்டன்களான பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோரும் பாலியல் தொல்லை கொடுத்து வந்த பேராசிரியருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, 40 பக்க புகார் கடித்தத்தை மாவட்ட நீதிபதி மகிழேந்தியிடம் மாணவி கொடுத்தார்.

    அதில், 7 மாதங்களுக்கும் மேல் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். பிறகு, கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய மாவட்ட நீதிபதி ‘இன்னும் எத்தனை நிர்மலாதேவிகள் உள்ளனர் என்றுக் கூறி வருத்தம் தெரிவித்தார்.

    மாணவி பாலியல் விவகாரத்தில் ஏ.டி.எஸ்.பி. வனிதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை வேளாண் பல்கலைக் கழக ஒழுங்கு நடவடிக்கை குழுவும் கல்லூரிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தியது.

    இந்த நிலையில் பாலியல் புகார் கூறிய மாணவியிடம் விசாரணை நடத்துவதற்காக இன்று 2 விசாரணை குழு அமைப்புகள் திருவண்ணாமலைக்கு வந்து முகாமிட்டு உள்ளன.

    மாணவியை விசாரணைக்கு ஆஜராக வேளாண் பல்கலை ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதன்படி இன்று கல்லூரி வளாகத்தில் பல்கலைக்கழக விசாரணை குழு முன்பு மாணவி ஆஜராகி பேராசிரியர்களின் பாலியல் தொல்லை குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

    இதேபோல், மனித உரிமை அமைப்பும் சென்னையில் இருந்துவந்துள்ளது. மாணவி மற்றும் பேராசிரியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  #ChennaiStudentharassment #AgriCollege

    பேராசிரியர்கள் மீதான பாலியல் புகாரில் மாணவி ஆடியோ உரையாடலை ஒப்படைத்ததையடுத்து, போலீஸ் சூப்பிரண்டு வனிதா பேராசிரியர்களை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளார். #ChennaiStudentharassment #AgriCollege
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை அரசு வேளாண்மை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் சென்னை பெருங்குடியை சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    பாலியல் தொல்லைக்கு விடுதி காப்பாளர்களாக உள்ள பேராசிரியைகள் புனிதா, மைதிலி ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம்சாட்டிய மாணவி, பேராசிரியைகள் பேசியதாக ஆடியோவை வெளியிட்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்த நிலையில், பாலியல் புகார் குறித்து மாணவியின் தோழிகள் 4 பேரை விசாரணைக்கு ஆஜராக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா உத்தரவிட்டுள்ளார். உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியைகளின் ஆடியோ பதிவுகளையும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதாவிடம் மாணவி ஒப்படைத்துள்ளார்.

    இதில், 10-க்கும் மேற்பட்ட உரையாடல் பதிவுகள் இருந்தன. முதலில் சி.டி.க்களில் பதிவு செய்த ஆடியோவை வழங்குவதாக மாணவி கூறினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆடியோவின் ஒரிஜினல் பதிவுகளையும், பேராசிரியைகளின் உரையாடல்களை பதிவு செய்த செல்போனையும் ஒப்படைக்க உத்தரவிட்டார்.



    அதன்படி, உரையாடலை பதிவு செய்த செல்போன், தன்னிடம் இருந்த அத்தனை ஆவணங்களையும் மாணவி ஒப்படைத்துள்ளார். இதனை வைத்து உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் மற்றும் பேராசிரியைகள் புனிதா, மைதிலி ஆகியோரையும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

    விசாரணை வளையத்திற்குள் பேராசிரியைகள் கொண்டுவரப்படுவதால் மாணவியின் பாலியல் தொல்லை புகாரில் பரபரப்பு தகவல்கள் வெளியாக கூடும் என தெரிகிறது. ஒரு வேளை விசாரணைக்கு ஆஜராக உதவி பேராசிரியரும், பேராசிரியர்களும் மறுத்தால் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே, மாணவியின் பாலியல் புகாரில் வேளாண் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் பேராசிரியைகளிடம் பணம் கேட்டு மர்மநபர்கள் மிரட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

    பணம் கொடுக்கவில்லையெனில் பிரச்சினையை பெரிதுப்படுத்திவிடுவோம் என்று மிரட்டி பணம் கேட்டு அடிப்பணிய வைக்க முயற்சி நடப்பதாக கல்லூரி முதல்வர் புகார் கூறியுள்ளார். #ChennaiStudentharassment #AgriCollege

     

    ×